நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?
தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத் தெரிவு போன்ற குணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர் மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.
நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாக விளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்க குணம் உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல் பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர் சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம் கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்கு உண்டு. கண், வயிறு, தலை சம்பந்தமான சிறிய உபாதைகள் ஏற்படும்.
மொத்தத்தில், புகழ் விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.
முதலாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
|
: A,I,J,Q,D,T,M,E,H,N,X,C,G,L,S
|
நன்மை தரும் எண்கள்
|
: 1,3,4,5,9
|
நிறம்
|
: இளம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள்
|
ரத்தினம்
|
: மாணிக்கம்
|
ஹோரை
|
: சந்திரன், குரு, புதன்
|
திசை
|
: கிழக்கு, வடகிழக்கு
|
தொழில்
|
: அரசு வேலை, அரசியல், மருத்துவம், கமிஷன் தொழில்
|
முதலாம் எண்ணில் பிறந்த பிரபலங்கள
எண்கணிதத்தின் தந்தை கீரோ
|
: 01.01.1870
|
சத்ரபதி சிவாஜி
|
: 10.04.1627
|
விமான கண்டுபிடிப்பாளர் ஆர்வில் ரைட்
|
: 19.08.1905
|
நீராவி இயந்திரத்தைத் தந்;த ஜேம்ஸ் வாட்
|
: 19.01.1736
|
லெனின்
|
: 10.04.1870
|
நடிகர் என்.டி.ராமராவ்
|
: 28.05.1922
|
பில்கிளிண்டன்
|
: 19.08.1946
|
மைக்கேல் ஜாக்சன்
|
: 01.09.1959
|
இளவரசி டயானா
|
: 01.07.1961
|
தியாகராஜ பாகவதர்
|
: 19.05.1890
|
ஜெயப்பிரகாஷ் நாராயண்
|
: 10.10.1902
|
நீங்கள் 2 எண்ணில் பிறந்தவரா?
2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2 இன் அதிபதி சந்திரன்.
இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.
உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.
இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.
பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.
அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.
இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

2 ஆம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
|
: R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W
|
நன்மை தரும் எண்கள்
|
: 2,7,1,6
|
நன்மை தரும் தேதி
|
: 27,11,16,20,25,29
|
நன்மை தரும் நிறம்
|
: வெள்ளை, சந்தனம்
|
நன்மை தரும் ரத்தினம்
|
: முத்து
|
நன்மை தரும் ஹோரை
|
: சந்திரன், குரு, சுக்கிரன்
|
நன்மை தரும் திசை
|
: வடகிழக்கு
|
நன்மை தரும் தொழில்
|
: நீர், விவசாயம், வானியல், எழுதுகருவி, பண்ணை
|
2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்
மகாத்மா காந்தி
|
: 02.10.1969
|
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா
|
: 02.10.1908
|
தாமஸ் ஆல்வா எடிசன்
|
: 11.02.1847
|
டைரக்டர் சத்யஜித்ரே
|
: 02.05.1921
|
ராஜிவ் காந்தி
|
: 20.08.1994
|
லால்பகதூர் சாஸ்திரி
|
: 02.10.1904
|
மகாகவி பாரதியார்
|
: 11.09.1882
|
காஞ்சிப் பெரியவர்
|
: 20.05.1894
|
பாடகி கே.பி சுந்தரம்பாள்
|
: 11.10.1908
|
நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?
3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர். இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.
சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர். சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.
மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும் கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள் ஆடை அதிகம் பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க விரும்புவர். பிறர் துன்பங்களை தன்னுடையது போல நினைத்துக் கலங்குவர்.
காமனின் கண்பார்வை போல பார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழு பிரம்மச்சாரிபோல் ஆச்சார புருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.
3ஆம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மை தரும் முதல் எழுத்துக்கள்
|
: C,G,L,S,A,I,J,Q,Y
|
நன்மை தரும் தேதிகள்
|
: 1,3,9,10,12,18,19,21,27,28,30
|
நன்மை தரும் கிழமை
|
: வியாழன், ஞாயிறு, செவ்வாய்
|
நன்மை தரும் நிறம்
|
: மஞ்சள், இளம் சிவப்பு
|
நன்மை தரும் ஹோரை
|
: குரு
|
நன்மை தரும் திசை
|
: கிழக்கு
|
நன்மை தரும் தொழில்
|
: கல்வி, தரகு, ஆலோசனை, மருத்துவம்,
|
அரசியல், ராணுவம், வங்கி.
|
3ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ஜெகதீஷ் சந்திரபோஸ்
|
: 30.11.1863
|
சர்.சி.வி.ராமன்
|
: 12.01.1879
|
சுவாமி விவேகானந்தர்
|
: 12.1.1863
|
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
|
: 3.3.1847
|
வீரபாண்டிய கட்டபொம்மன்
|
: 3.1.1760
|
பகவான் ரமணர்
|
: 30.12.1879
|
ஞானி சுத்தானந்தபாரதி
|
: 12.5.1897
|
ஹென்றி போர்டு (போர்டு கார் அதிபர்)
|
: 12.12.1950
|
திப்பு சுல்தான்
|
: 21.11.1750
|
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
|
: 30.10.1908
|
நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை.
மனதில் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லிவிடுவர். இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். தனது கருத்துக்களைத் தைரியமாக வெளியில் சொல்வார்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர்த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர்களின் மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவது போல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர்.
சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர் இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.
இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிக முக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள்.
ஒரு இடத்தில் ஒரு மணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்க வைப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சை நிறுத்துவது அவ்வளவு கடினம். எழுத்தாற்றல் மிக்க இவர்கள் பிறர் எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சீர்;திருத்தவாதியான இவர்கள் அரசாங்கத்திற்கே சில சமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லி அசத்திவிடுவார்கள்.
பேசும்போது குரலை ஏற்றி, இறக்கி கையை ஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களி;;ன விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டுகொள்ளாத இவர்கள், தன் கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள். உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை... அது சதுர வடிவம் உடையது என விதண்டாவாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சில அருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லி விடுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதை செயலுக்குக் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்.
4ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ராமானுஜர்
|
: 04.04.1917
|
கணிதமேதை ராமானுஜம்
|
: 22.12.1887
|
திருப்பூர் குமரன்
|
: 04.10.1904
|
சர்தார் வல்லபாய் படேல்
|
: 31.10.1875
|
தாதாபாய் நௌரோஜி
|
: 04.09.1825
|
ராஜாராம் மோகன்ராய்
|
: 22.05.1772
|
ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?
5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை `சோம்பேறி\' என்று வசைபாடவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர்.
பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி... பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து கெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான். ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்ய தயாராக இருப்பர். மன தைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்வி ஏற்படுவதை வெகு சீக்கிரம் மறந்து அடுத்த காரியத்திற்கு தயாராகி விடுவர். ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகு இல்லை. பூமியில் இந்த 5ஆம் எண்காரர்கள் இல்லையேல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை. துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர் முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக் கருத்தையும் உடனே வெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள். ஐந்தாம எண் குழந்தைகளை சிறு பிராயத்திலிருந்தே நல்ல குணமுள்ள நண்பர்களுடன் பழகச் செய்ய வேண்டும். எதையும் வெகு சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதை கிரகிக்க நல்ல நண்பர்கள் வேண்டுமல்லவா?பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர், எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்த கல்வித் தரத்துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவை பாதியாக குறைத்து விடுவர். சகல விஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண்காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல் தூக்கம் பிடிக்காத இவர்கள் `கலைத்துறையில்\' ஜாம்பவான்களாக இருப்பர். 5 ஆம் எண்ணில் பிறந்தவ பிரபலங்கள் வள்ளலார் - 05.10.1823ஷ்ரீ தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) - 05.05.1759வ.உ. சிதம்பரம் பிள்ளை - 05.09.1872ஜவகர்லால் நேரு - 14.11. 1889டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) - 14.11.1889அம்பேத்கர் - 14.04.1891சுபாஷ் சந்திரபோஸ் - 23.01.1897திலகர் - 23.07.1856வில்லியம் ஷேக்ஸ்யிர் - 24.04.1564
|
No comments:
Post a Comment