பிறவி எண்ணிற்கு ஏற்ற தொழில்கள்

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 1 உள்ளவர்கள்
இவர்கள் பொதுவாக நிர்வாக சக்தி நிரம்பியவர்கள். எப்போதும் அதிகாரமுள்ள பதவிகளைவகிப்பதற்கு ஏற்றவர்கள். தங்களுக்கு கீழே உள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் சக்திநிறைந்தவர்கள். உழைப்பில் பின் வாங்காதவர்கள். எதையும் அதற்குரிய சட்டப்படிசெயல்படவே விரும்புவார்கள். அரசாங்க அலுவலகஙகள், தர்ம ஸ்தாபனங்கள்,கூட்டுறவுக் கழகங்கள், பொது நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில்நிர்வாகியாக அமைவார்கள். எண்ணின் பலம் குறைந்தவர்கள் நம்பிக்கையானகுமாஸ்தாவாக இருப்பார்கள். தனியாக நிறுவனங்களை நடத்தும் திறமை மிக்கவர்கள்.ஆனால், வளைந்து கொடுக்கவோ, அனுசரித்துப் போகவோ தெரியாதவர்கள். இலாபநோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும்.போட்டிகளில் விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களுக்கென ஒரு வசிய சக்திஉண்டு. இதுவே இவர்களை சிறந்த நிர்வாகியாகவும், முதலாளியாகவும் காட்டிவிடும்.தொழிலில் ஏற்படும் சங்கடங்கள், போட்டிகளால் அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும்,உடனே சமாளித்து விடுவார்கள். அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள்,நிணிவிஷி வியாபாரிகள் போன்ற தொழில்களும் ஒத்து வரும். விஞ்ஞானத் துறை,பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித் துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்துவரும். வெங்காயம், புகையிலை, கொள்ளு, உளுந்து, கோதுமை, பழவகைகள், காய்கறிவகைகள், ஆபரணங்கள், செயற்கை நூலிழைகள், மூலிகைகள் சம்பந்தப்பட்டவியாபாரங்கள், பிராணிகள் பராமரிப்பு, தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களும் இவர்க-ளுக்குஏற்ற தொழில்கள். இவர்கள் தங்களது வியாபார யுக்திகளையும், விளம்பர யுக்திகளையும்காலத்திற்கேற்றபடி மாற்றிக்கொண்டு செயல்பட்டால், தங்களது தொழிலில் பெரும்வெற்றிகளைக் குவிக்கலாம்.
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 2 உள்ளவர்கள்
இவர்கள் கலை மற்றும் தண்ணீர் தொடர்புள்ள தொழில்களைச் செய்பவர்களாகஇருப்பார்கள். திரைப்படம் தயாரிப்பது, பத்திரிகை நடத்துதல் மற்றும் எழுதுதல்ஆகியவையும் ஒத்து வரும். பேச்சாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பாடல் எழுதுபவர்கள்போன்றவர்களாகவும் இருப்பார்கள். விவசாயம், ஜவுளி வியாபாரம், நகை, வெள்ளிஆபரணங்கள் விற்பனை, புகைப்படத் தொழில் ஆகிய தொழில்களும் நன்கு அமையும்.துணி தைத்தல், துணி வெளுத்தல், மர வியாபாரம், வாசனைத் திரவியங்கள், காய்கறிகள்விற்பனையும் இவர்களுக்கான தொழில்கள். கற்பனை சக்தி அதிகம் உள்ளதால், மனோவேகம் அதிகமாக இருக்கும். இவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதால் வக்கீல்தொழில், வாக்குவாதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். மனத்தில் சந்தேகமும்,அதைரியமும் எப்போதும் இவர்களை வாட்டி வரும். அவற்றை தகுந்த குருவின் மூலம்ஆலோசனைகள் பெற்று நீக்கிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கும் அரசாங்க உத்தியோகம் யோகம் உண்டு. நீர்சம்பந்தமான மீன் பிடித்தல், படகோட்டுதல் மற்றும் நர்ஸ்கள், ஆயாக்கள் போன்றவேலைகளும், அடிக்கடி பிரயாணம் செய்யும் தொழில்கள் இவர்களுக்கு ஒத்து வரும்.இவர்கள் ஆசை மற்றும் எதிர்பார்ப்புடன் செயலாற்றுவார்கள். அடுத்த தொழில் இலாபம்என்று தொழிலை அடிக்கடி உறுதியுடன் தொடர்ந்து ஒரே தொழிலை வியாபாரத்தைநம்பிக்கையுடன் செய்து வந்தால் வெற்றிகள் நிச்சியம்.

 கடல் வணிகம் போன்ற தொழில்களிலும் ஈடுபடுவார்கள். இரசாயனம், மருத்துவம், சட்டம்,தர்க்கம், தாவர இயல், சரித்திரம், தத்துவம் இவர்களுக்கு பொருத்தமான துறைகள்.ஆசிரியர் தொழிலும் நன்கு அமையும். விதி எண்ணும் பெயர் எண்ணும் இவர்களதுதொழிலை மாற்றி விடும் வல்லமை பெற்றது.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 3 உள்ளவர்கள்
இவர்களுக்கு ஆசிரியர், சோதிடர்கள் போன்ற அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்புதரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில்உத்தியோகம் கிடைக்கும். பேச்சாளர்கள் இவர்கள் சிறந்த நுண்ணிய சாத்திரஆராய்ச்சியார்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். பலஅன்பர்கள் புத்தக விற்பனையாளர்களாகவும், பள்ளிகள் நடத்துபவர்களாவும் இருப்பார்கள்.அரசியல் ஈடுபாடும் ஏற்படும். (.ம். கலைஞர் கருணாநிதி) நன்கு பிரகாசிப்பார்கள்.எழுத்தாளர்கள், பேப்பர் கடைகள், அச்சுத் தொழில் ஆகியவையும் இவர்களுக்கு நன்குஅமையும். கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள் போன்றதொழில்களும் சிறப்புத் தரும். இராணுத்திலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

 குருவுக்கே உரிய ஆலோசனைத் தொழில்கள் (Consultancy) ஆசிரியர், பேராசிரியர் போன்றதொழில்கள் மிகப் பொருத்தமான தொழில்கள்! நிர்வாக சக்தி மிகுந்தவர்களாக இருப்பதால்அரசியல், நிர்வாகம், வங்கி போன்ற தொழில்களில் பிரகாசிப்பார்கள். பல மொழிகளின் மீதுநாட்டம் கொள்வார்கள். அறிவுத் தாகம் கொண்டு எதையாவது படித்துக் கொண்டேஇருப்பார்கள். வயது இவர்களுக்குத் தடையில்லை. மேலும் நீதித்துறையிலும்,வழக்கறிஞர், கோவில் அறப்பணிகள் போன்றவையும் இவர்களுக்குள்ள தொழில்கள்.ஆன்மீகப் பேச்சாளர்கள், சோதிடர்கள், புத்தகம் வெளியிடுதல், எழுதல், பொது கௌரவப்பணிகள் போன்றவையும் இவர்களுக்கு ஒத்த தொழில்கள்.

 அரசியல் துறையிலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். MLA, MP போன்ற பதவிகளும்,அமைச்சர் பதவிகளும் தேடி வரு. அரசாங்க நிறுவனங்கள், இராணுவம் போன்றவற்றிலும்தலைமைப் பொறுப்புகளை ஏற்று நன்முறையில் செய்வார்கள். மற்றவர்களுக்குஆலோசனை செய்வதிலும், காரியங்களை திறம்பட ஏற்று நடத்துதலிலும் வல்லவர்கள்.ஆனால் எதுவும் முறைப்படி நடக்க வேண்டும் என எதிர்ப்பார்கள். மிகச் சிறந்தகுமாஸ்தாக்கள், கணக்காளர்கள் இவர்களே.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 4 உள்ளவர்கள்
ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், சோதிடநிபுணர்கள் ஆகியவை இவர்களுக்கு ஒத்து வரும். இவர்களில் பலருக்கு நல்ல ஆராய்ச்சிமனப்பான்மையும் உண்டு! துப்புத் துலக்கும் பணிகளிலும் விரும்பி ஈடுபடுவார்கள்.

 நிருபர்கள், டைப்பிஸ்ட்டுகள், இரயில்வே, வங்கி ஊழியர்கள் போன்ற தொழில்களும்அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மலாளர், மேற்பார்வையாளர்போன்றவையும், இவர்களுக்கு நன்மை தரும் தொழில்களாகும். கராத்தே, சர்க்கஸ்,சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்கள் ஏற்றவை. மேலும் இவர்களுக்கு மருத்துவம்,சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடு தீவிரமாக அமையும்.

 விமர்சனங்கள் எழுதுவதில் இவர்களுக்குத் தனித்தன்மையும், புகழும் உண்டு. புத்தகங்கள்விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும் நன்மையே செய்யும். மாடு, குதிரைபோன்ற கால்நடைத் தரகும், லாபம் தரும். கட்டில், பீரோ போன்றவை, சினிமாப் படங்கள்தயாரித்தல், விற்றல் ஆகியவையும் ஒத்துவரும்! மக்கள் தொடர்பு தொழில்கள் (றி.ஸி.ளி)இவர்களுக்கு மிகவும் ஒத்துவரும் தொழிலாகும். டெய்லர்கள், கார், பைக், ஸ்கூட்டர்மெக்கானிக்குகள், எலக்ட்ரிசியன்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலைபோன்றவை இவர்களுக்கு அமையும்.

 இவர்களும் மனோ வேகம் நிறைந்தவர்களே! உடப்பயிற்சி, சர்க்கஸ் போன்ற உடல்சம்பந்தமான தொழிலும் ஒத்து வரும். றிஸிளி தொழில்கள் , ஊர் சுற்றிச் செய்யப்படும்தொழில்கள், யந்திரங்கள் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரத்தொடர்பான கைத்தொழில்கள், கால்நடைகள், நாய் போன்ற நாற்கால் பிராணிகளில்வியாபாரம் நன்கு அமையும்.

 பேச்சில் சமர்த்தர்கள். பெரிய பேச்சாளர்களாகவும், அரசியலில் ஈடுபாடுஉள்ளவர்களாகவும் இருப்பார்கள். ... கட்டிடம் கட்டுதல், ஆட்களை விரட்டி வேலைவாங்குதல் தொழில்களும் இவர்களுக்கு ஒத்து வரும். .. மற்றும் அனைத்து வாகனங்கள்ஓட்டுதல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மக்களுக்கு தினமும் தேவைப்படும் தொழில்கள்,இன்சினியரிங் தொழிலாளர்கள், பத்திரிக்கைத் தொழில், .. ஆகியவையும் ஒத்து வரும்.ரெயில்வே, பஸ், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அமையும்.

 வீடு, வாகனம் புரோக்கர்கள், வக்கீல்கள், ஹாஸ்டல், ஹோட்டல் நிர்வாகிகளாகவும்,மதுபானங்கள் விற்பனை, தாதா போன்ற வழியில் ஈடுபடுதல் (சிலர்) ஆகியவையும்அமையும்.

 மீன், இறைச்சி வியாபாரம் மின்சாரம், இலக்கியம் தொடர்பான வேலைகள், மாந்தரீகத்தொழில்கள், ஆடு,மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில், விஷ வைத்தியம்செய்தல், வித்தைகள் செய்து சம்பாதித்தல் போன்றவையும் அமையும். சிலர் சட்டத்திற்குப்புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின் பலம் குறையும் போதுமற்றவர்களை விரட்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள்.

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 5 உள்ளவர்கள்
எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம்உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும்விவாதங்களிலும் அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும்(Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும் ஏற்றவை! நடிகர்கள்,நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாக புகழ்பெறுவார்கள்.

 இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம் நிறைந்தவர்கள்.இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன்முகவர்களாகவும் மிகவும் புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents)நன்கு சம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது,இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்புஇதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள்!இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றக்கூடாது.ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றிஅடையலாம்.

 உலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors)நன்கு விளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள் ஆகியவையும்இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்பு சம்பந்தமான (P.R.O) தொழில்களிலும்நன்கு பிரகாசிப்பார்கள்.

 இவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல், ஜோதிடம் பார்த்தல்,காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்றவியாபாரங்கள்/ தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால்துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants, சொற்பொழிவாற்றுதல், புரோகிதம்செய்தல் போன்றவையும் ஒத்து வரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும்ஈடுபடுவார்கள். சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.

 பொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும். ஆனால் பொருட்கள்,கருவிகள் உற்பத்தித் துறைகளில் இறங்கக்கூடாது! Marketing மற்றும் Broker போன்றதொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள்.இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பலஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால்முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலைசெய்வார்கள்! அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களதுநோக்கம்! ஏதாவது உபதொழில் .. செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாகஇருப்பார்கள். ... விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

 அறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்ற துறைகளும் நன்குஅமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள்! மற்றவர்களை வசியம் செய்து தங்களின்காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள்,வியாபாரிகள் இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம், செய்திசேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 6 உள்ளவர்கள்
இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா,இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும்இவர்களுக்கு வெற்றி நிச்சயம்! மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள்வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசுஅதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும்,அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள்வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள்,நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே! ஆனால் பணத்திற்காக வளைகொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும்அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும்.

 முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின்உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காகவீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப்பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே! சங்கீதம், வாய்ப்பூட்டு, இசைவாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.

 இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பல துறைகளிலும்ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற கவின் கலைகளில் (Fine Arts) வெற்றிபெறுவார்கள். சிலர் சட்ட நுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும்,மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள் உற்பத்தி மிகவும்விற்பனை துறைகள் நன்கு அமையும்.பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், முத்து, பவளம்,வைர வியாபாரம் உகந்தவை! இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்!நளினமாக நடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.

 திரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார் செய்தல்போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள்,அரிசி, உப்பு, வாசனைப் பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge)நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு தையல் நிலையங்கள்,ஆண், பெண் அழகு நிலையங்களும் இவர்களுக்கு ஏற்றவை! Fashion Designing, Garmentதொழில்களும் உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத் துறையிலும்பிரகாசிப்பார்கள்.

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 6 உள்ளவர்கள்
இவர்கள் சினிமா நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பார்கள். இந்த எண்காரர்கள் பிரபலபாடர்களாக, கலைஞர்களாக, கவிஞர்களாக, புகழ்பெற்ற எழுத்தாளர்களாக பெரியவிடுதிகளின் உரிமையாளர்களாக இருப்பார்கள். சவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால்,தயிர், சோடா பானவகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருள்கள்(பீடி, சிகரெட்) விற்பனைபோன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திரவ சம்பந்தப்பட்ட அனைத்துத்தொழில்களும் இவர்களுக்குப் பெருத்த இலாபங்களைக் கொடுக்கும். உத்தியோகங்களில்சிறப்பிருக்காது! அதாவது பதவி உயர்வுகள் ஏதாவது ஒரு காரணம் முன்னிட்டுஇவர்களுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். சமையல் கலைகளிலும், பெயர்பெற்றவர்களாக இருப்பார்கள்.

 சட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக் கடையும்இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும். அயல்நாட்டு வியாபாரங்களும், ஏற்றுமதி&இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச் சிறந்தது! பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம்இவர்களுக்கு ஒத்துவரும். ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xeroxகடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலிலும்ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்துமுயன்றால் முன்னேறலாம். போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்றதொழில்களும் சிறந்தவை! சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும் சிறந்தவையே!

 இவர் ஆகாயத்தோடு தொடர்புடைய தொழில்களில் வெற்றியைத் தருபவர். Computer, Sattelite தொழில்கள், Cable Operators போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள். உத்தியோகத்துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது. இவர்கள் தண்ணீரின் மூலம் செய்யும்தொழில்களில் வெற்றி பெறுவார்கள். சமையல் தொழில், சித்திரம் வரைதல் தொழிலும்நன்கு வரும். இவர்கள் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் அல்லதுஎதிர்ப்பார்கள். பெரிய புகழும், பொருளும் இறுதிக் காலத்திற்குள் சம்பாதிப்பார்கள். மதவழச்சொற்பாளர்கள், கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள். பலர்வெளிநாடுகளில் பணியாற்றுவார்கள். மர விற்பனை, மரச்சாதனங்கள் விற்பனை,பாத்திரங்கள் தயாரித்தல் T.V. Computerஉற்பத்தி செய்தல் மற்றும் பழுது பார்த்தல்தொழிலிலும் நன்கு அமையும். மருந்துகள், மருத்துவம் தொடர்பான தொழில்கள்,வியாபாரங்கள் அமையும். மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகள் கலைஞர்கள் இவர்களே!கதை, கவிதை, வேதங்கள் ஆன்மீகம், சமூக சேவை செய்தல், Grainite Tiles வியாபாரம்போன்றவையும் ஒத்து வரும்.

 பிராணிகளைப் பிடிக்கும் தொழில், விஷ சம்பந்தமான பொருட்கள் தயாரித்தல்போன்றவையும் நன்கு அமையும். சூஷ்மமான மூளைத் தொழிலாலான Scientist, Researchதுறை, Space-craft துறையும் நன்கு அமையும். நியாயம், நேர்மையை அதிகம் மதிப்பவர்கள்இவர்கள். நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள் (Doctors) ஆகிய தொழில்களும் நன்குஇருக்கும். பலர் அரசியல் வானிலும் பிரகாசிப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும்நன்கு அமையும். தொழிலுக்காக குடும்பத்தினரை அடிக்கடி பிரிவார்கள்.
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 8 உள்ளவர்கள்
இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும் வெற்றி தரும். 8ம் எண்வலிமை பெற்றால் பொறியாளர்களாகவும், 8-ம் எண்ணன் வலிமை குறைந்தால் டிப்ளமோமற்றும் லேத் தொழில்கள் போன்ற வேலைகளில் ஈடுபடும் சாதாரணத்தொழிலாளிகளாகவும் இருப்பார்கள். லாரி, பஸ் போன்ற (சனியின் காரகத்துவ) தொழில்இவர்களுக்குப் பெருத்த அதிர்ஷ்டத்தைத் தரும். மில்கள் எண்ணெய் மில்கள், இரும்புவியாபாரம் ஆகியவையும் நன்மை தரும். எண்ணெய் வியாபாரமும் நல்லது.
 ஆன்மீக மடாதிபதிகள், கோவில் தர்மகர்த்தா, ஊர்மணியகாரர் போன்றவர்ளாகவும் புகழ்பெறுவார்கள். மேலும் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குயோகத்தைத் தரும். விவசாயம், கட்டிங்கள் கட்டுதல், லேஅவுட் போடுதல் இவர்களுக்குஒத்து வரும். பெரிய நிலக்கிழார்களும், பெரும் விவசாயிகளும் இவர்கள்தாம்.
 உலகத்தை மறந்து உழைப்பதால் இவர்கள் ஆராய்ச்சித் தொழில்களில் (Research and Development) பல வெற்றிகள் பெறுவார்கள். பூகோளம், மற்றும் (Geology) நிலஆராய்ச்சிகளில் இவர்களது வாழ்க்கை அமையும். 8-ம் எண்காரர்கள் மிகப் பெரியபேச்சாளர்களாகவும், மதப்பிரசங்கிகளாகவும் விளங்குவார்கள். சுரங்கப் பொருட்கள்எடுத்தல், சுரங்கப் பொருள்கள் வியாபாரம் செய்தல் வெற்றி தரும். கிரனைட் கற்கள்,கடப்பாக்கற்கள் வியாபாரம் போன்றவை வெற்றி தரும்.
 கம்பளித் துணிகள், ஆயுதங்கள், சோப்புக்கள், வியாபாரம் மற்றும் உற்பத்தித் தொழில்கள்நல்ல இலாபத்தைத் தரும். இவர்கள் அச்சகம் (Press), சோதிடம், வைத்தியம் ஆகியதொழில்களிலும் வெற்றியடையலாம். சிறைத் துறையும் (Jail Department) இவர்களுக்குஒத்தவரும்.
 இவர்கள் கடின உழைப்பாளிகள். சனி ஆதிக்கம் குறைந்தவர்கள் கூலியாகவும், Technicianீகளாகவும் இருப்பார்கள். கடலை, எள்ளு, கம்பு, மலை வாழை, புகையிலை, மூங்கில், கீரைவகைகள், மரம், விறகு, கரி, எண்ணெய் வியாபாரம், உதிரி பாகங்கள்(Spares) விற்பனையும்நன்கு அமையும். ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில்கள், பட்டிட வேலைமேஸ்திரி, தபால் துறை, துப்பறியும் துறை (Detective) துப்புரவுத் துறை (Sanitary)யிலும் நன்குபிரகாசிக்கலாம். அச்சுத் தொழில், பைண்டிங் போன்றவையும் நன்கு அமையும். பலர்பொறுமைசாலிகள், ஆராய்ச்சியாளர்கள், கணிதம் பூகோளம், நில ஆராய்ச்சி (Mining),தத்துவம், பௌதிகம் (Chemsitry), இரும்புத் தொழில்கள் போன்றவையும் நன்கு அமையும்.பிராணிகள் வளர்ப்பு, வைத்திய தொழிலம் பார்க்கலாம். விவசாய முதலாளிகளும் (Landlord),தொழிலாளிகளும் (Labourers) இவர்களே. பலர் பெரிய தொழிலதிபதிகளாகவும் வெற்றிபெறுவார்கள்.
 போக்குவரத்து தொழில்கள் (Mechanic. Drivers etc) மூலம் நன்கு சம்பாதிக்க முடியும். லாரி,பஸ்கள் நடத்துதல் மூலம் நன்கு பணம் சேர்க்க முடியும். டாக்ஸி, ஆட்டோஓட்டுநர்களாகவும் பணி புரிவார்கள். வெளி நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு பலருக்கும்கிடைக்கும். இரும்புச் சுரங்கம், நிலத்தடியில் இருக்கும் கற்கள் சுரங்கத் தொழில்போன்றவையும் ஒத்து வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலும் வெற்றி தரும். கட்டிடவேலைகள், இன்சினியரிங் பணிகள் இவர்களுக்குப் பிடித்தமானவை! கடுமையானஉழைப்பை எதிர்பார்க்கும் தொழில்கள், கருவிகளை இயக்குபவர்கள் (Heavy M/C Operators)போன்றவையும் இவர்களுக்கு நன்கு அமையும்.
 உழவுத் தொழிலும், எண்ணெய், இரும்புகள், லாரி வியாபாரங்கள், உதிரி பாகங்கள்உற்பத்தி மற்றும் விற்பனையும் இவர்களுக்கு உரிய தொழில்கள். சிறைச்சாலைத் துறை,மக்கள் நிர்வாகத்துறை, தோல், செருப்பு (Leather) விற்பனையும் இவர்களுக்கு நன்குஅமையும். நில அளவையும், விவசாயமும் இவர்களுக்கு ஒத்து வரும். எண்ணின் ஆதிக்கம்குறைந்தவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஏற்றுமதி,இறக்குமதி தொழிலும் இவர்களுக்கு ஒத்து வரும்.

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 9 உள்ளவர்கள்
இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும்இருப்பார்கள். இராணுவம், போலீஸ், மேனேஜர் போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம்உடையவர்கள். மேலும் கட்டிடம் கட்டுதல், இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச்சாமான்கள் உற்பத்தி ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும். சிறந்த அமைச்சர்களாகவும்,இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வான இயல் துறையும், இவர்களுக்கு மிகவும்பிடிக்கும்.

 நாட்டிற்காகத் துப்பாக்கி ஏந்து வீரர்கள் இவர்களதான். அநீதிகளை எதிர்த்துப்போராடுவார்கள். இவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம். பலரை வைத்து வேலை வாங்கும்தலைவர்களாக, உயர் அதிகாரியாக, மேஸ்திரியாகப் புகழ் பெறுவார்கள். இவர்கள் வீரம்மிகுந்தவர்கள், துப்பறியும் தொழில் ஒத்து வரும். கலைத் தொண்டிலும், உணர்ச்சியைத்தூண்டும் எழுத்திலும் பிரகாசிப்பார்கள்! பொது மக்களுக்காகத் தியாகம் (உண்மையாகச்)செய்ய வல்லவர்கள். பிரபல வேட்டைக்£கரர்களாகவும், வனவிலங்குகளைத் திறமையாகஅடக்கும் தொழிலும் நன்கு பிரகாசிப்பார்கள். கால் பந்தாட்டம், டென்னிஸ், ஹாக்கி,பேட்மிண்டன், வாலிபால், சைக்கிள் பந்தயம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்! சிறந்தவிளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள். இரயில், கார், லாரி ஆகியவைஓட்டுநர்கள், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றிலும் இவர்கள் தொழில்அமையும். இவர்கள் நிர்வாகச் சக்தி மிகுந்தவர்க! ஆயுதம் தாங்கிச் செய்யும் அனைத்துத்தொழிலும் வெற்றி பெறுவார்கள். இராணுவம், காவல் துறை, அறுவை மருத்துவர்கள்போன்றவைகளில் பிரகாசிப்பார்கள். கார், ரயில், விமானம், ஓட்டுவதில் நாட்டம்உள்ளவர்கள். வேகமாகச் செல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பொறுமைஇவர்களுக்குப் பிடிக்காத விஷயம். எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறை, விவசாயத்துறையும்ஒத்து வரும். தீயுடனும், வெப்பத்துடனும் சேர்ந்த எந்தத் திட்டங்களிலும் வெற்றிபெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் பிரகாசிப்பார்கள். சிலர் கோபக்காரர்களாகமாறி தீய செயல்களைச் செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்.

 பொறியியல் தொடர்பான பெரிய பொறுப்புகளை தைரியமாக ஏற்று வெற்றி பெறுவார்கள்.இரும்பு, எஃகு தொழில்களில் ஈடுபட்டால் சீக்கிரம் முன்னேறலாம். அச்சகத் தொழிலும்நன்கு அமையும். கட்டிடத் துறை, மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை, வாழை,மொச்சை, சிவப்பு தானியம் போன்றவை உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தச்சுவேலை போன்ற தொழில்கள் அனைத்தும் வெற்றி தரும். விளையாட்டு வீரர்கள்.மலையேறும் வல்லுநர்கள் போன்றவையும் வெற்றி தரும். ஆன்மிகத்திலும் சிலர்தீவிரமாக, முழுமையான மனதுடன் ஈடுபடுவார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களையும்தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.

குறிப்பு

 இதுவரையிலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களுக்கான தொழில்களைப்பார்த்தோம். உங்களது பிறவி எண்ணுக்கோ, விதி எண்ணுக்கோ, பொருத்தமான தொழிலாகஇருக்க வேண்டியது முக்கியம். பெயர் எண்ணிக்கான தொழிலிலும் ஓரளவு வெற்றிபெறலாம்.

 எனது அனுபவத்தில் எண்கணிதப்படியான தொழில்களே இறுதியில் மனிதனுக்குஅமைகின்றன. நீங்கள் கோடீஸ்வரராவது என்பது சரியான தொழிலைத்தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது என்பதால் மிகந்த கவனம் தேவை! எனவே ஒன்றுக்கு பலதடவை சிந்தித்து உங்களது தொழிலையோ, வியாபாரத்தையோ தொடங்குகள்! முடிந்தால்ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலிலும் ஈடுபடுங்கள்! தொழிலில் உங்களை நம்பி முழுமையாகஈடுபட்டால், அதில் வெற்றி பெறலாம். கோடிகளைக் குவிக்கலாம்.

No comments:

Post a Comment