அன்புள்ள நண்பர்களுக்கு
வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை வென்று பல சாதனைகள் செய்து பணம், புகழ், பதவி, குடும்பம், போன்ற எல்லா சிறப்புகளையும் பெற்று தடைகளை தகர்த்து புரியாத வினாக்களுக்கு விடைகளைத் தரவும், கல்வியில் வெற்றி, உத்யோக வெற்றி, குழந்தை பாக்ய வெற்றி, குடும்பத்தில் வெற்றி, உடல்நல வெற்றி இன்னும் எத்தனையோ வெற்றிகளைப் பெற ஆக்கபூர்வமான நிலையான சக்தியை நாம் பெறவேண்டும்.
அத்தகைய 'வெற்றி சக்தி' நமக்குள் உருவாகி, வாழ்வில் உயர, நமது பெயர் எண் பிறந்த தேதிக்குப் பொருந்துகிறபடி அதிர்ஷ்டகரமாக அமைய வேண்டும். அதிருஷ்டம் என்றால் என்ன? திருஷ்டி என்றால் 'பார்வை' என்றும், 'அதிர்ஷ்டம்' என்றால் 'கண்ணுக்குப் புலப்படாதது' என்றும் அர்த்தங்கள் உண்டு.
சுலபமாக வாழ்க்கையில் முன்னேறுவதையும், சுகமாகவும், சுபிட்சமாகவும், வளமாகவும், வனப்பாகவும், பணம், புகழ், பதவி, கௌரவம், மகிழ்ச்சி, வெற்றி, மன நிம்மதி இவைகள் எல்லாம் மனித வாழ்வில் இடம் பெறுதலையே அதிருஷ்டம் என்கிறோம்.
அனைவருக்கும் பொதுவானது அதிர்ஷ்டம். அது தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல. அதிர்ஷ்டத்தின் சூட்சுமத்தை தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் எடுக்கும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டப் பெயர் அமைத்து வாழ்வில் பூரண வெற்றிகளைப் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். அதிர்ஷ்டசாலி ஆகுங்கள்.
தொழிற்சாலை, வியாபார ஸ்தலங்களின் பெயர், அதன் உரிமையாளர் அல்லது உரிமையாளர்களின் பிறந்த தேதி எண்களுடன் ஒத்துப் போவதோடு பலம் பெற்ற சூட்சுமஎண்களை உடையதாக அமையுமானால் நூறு சதவீத லாபமேன்மை, முன்னேற்ற வாழ்வு நிச்சயம்.
மேற்படி தொழிற்சாலை அல்லது வியாபார ஸ்தலங்கள் ஆரம்பிக்கும் தேதி, புதுக் கணக்கு தொடங்கும் தேதி எண்கள், அதிர்ஷ்டமாக அமையுமானால் நஷ்டமோ, கஷ்டமோ கண்டிப்பாக உண்டாவதில்லை.
அன்பார்ந்த பெற்றோர்களே!
பிறந்த உங்கள் குழந்கைக்கு நட்சத்திரப்படி பெயர் சூட்ட ஆர்வம் காட்டுவதைப் போலவே, நியூமராலஜிப்படியும் பெயர் சூட்ட ஏன் ஆர்வம் காட்டக் கூடாது?
உங்கள் குழந்தையின் ஆயுள் பலம், ஆரோக்கியம், கல்வித் தேர்ச்சி, எதிர்கால முன்னேற்றங்கள் ஆகிய அனைத்தும் குழந்தைக்கு நீங்கள் வைக்கும் பெயரில் அல்லவா ஒளிந்து இருக்கிறது?
உங்கள் குழந்தையின் பிறந்த தேதியின் அலைவரிசைக்கு ஏற்றாற்போல் பெயர் சூட்சும எண் சிறப்பாக வருமாறு உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டி அதிர்ஷ்டசாலி ஆக்குங்கள்.
'எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு' -குறள்
கண்என்ப வாழும் உயிர்க்கு' -குறள்
பெயர் மந்திரம், உடல் எந்திரம்:
பிறந்த தேதிக்கு சாதகமான அலைவரிசையில் பெயர் எண் அதிர்வுகள் அமையும் போது கண்டிப்பாக வெற்றிகள் குவிகிறது. சொற்களுக்குள் சூட்சுமங்கள் உறங்கிக் கொண்டு இருக்கின்றன. சொற்களுக்குள்ள அதிசய ஆற்றல்கள் அமர்ந்து கொண்டுள்ளன. மந்திரம் என்பது சொற்சூட்சுமங்களின் அதிர்வுகளால் உண்டாகும் அதிசய நிகழ்வுகள் ஆகும்.
பெயரை சரியான முறையில் திருத்தி அமைத்து (மாற்றி) தினசரி ஆங்கிலத்தில் எழுதி வந்தால், அதுவே மந்திர சக்தியாகி அனைத்து சித்திகளையும் கொடுக்கும்.
பெயர் எழுத்து தலையெழுத்தை மாற்றும்:
'இதுவும் விதிப்படி நடக்கும் விந்ததான் எந்தத் தாயின் வயிற்றில் எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்படும் என்பதையும் இறைவன் குறிக்கிறான். பின்னாளில் நாம் வைத்துக்கொள்கிற புனைப் பெயரையும் கூட இறைவனே குறித்திருக்கக் கூடும்' என்கிற கவியரசு கண்ணதாசனின் வரிகளைச் சிந்தியுங்கள்.
எனவே, பூரண நம்பிக்கையுடன் எண்களைப் பயன்படுத்தி வருகின்றவர்கள் அளவற்ற செல்வத்தையும், உன்னத நிலையையும், காரிய சித்தியையும் கண்டிப்பாகப் பெற முடியும்.
வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ விரும்பும் ஒவ்வொருவரும் எண்ணையும், எழுத்தையும் தன்வயப்படுத்தி எண்ணியதை அடைய வாழ்த்துகிறோம்.
'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே' -தாயுமானவர்
வேறொன்றும் அறியேன் பராபரமே' -தாயுமானவர்